சென்னையில் 3 மணிநேரம் கனமழை நீடிக்கும்… 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிக கனமழை நீடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
சென்னையில் ஏற்கனவே 8 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்து வரும் நிலையில், மிகக் கனமழைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் பெய்து வரும் கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் கடும் போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்பட்டுள்ளது.
கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், வடபழனி, கோயம்பேடு மற்றும் போரூர் உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னையில், பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது காரணமாக மாநகர பேருந்துகள் செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சென்னை எம்ஆர்சி நகரில் கடந்த 7 மணி நேரத்தில் 18 செமீ மழை பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவ்வளவு அசிங்கப்பட்டுமா அந்தக் கூட்டணியில் தொடரணுமா?” விசிக, கம்யூ. கட்சிகளுக்கு இபிஎஸ் அழைப்பு.!
July 16, 2025
சிரியா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்.! “சிரியா எல்லையில் இஸ்ரேல் மக்கள் இருக்கவேண்டாம்” – நெதன்யாகு எச்சரிக்கை.!
July 16, 2025
நாளை (ஜூலை 17) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!
July 16, 2025