இளமை இதோ இதோ.! இசைஞானி வெளியிட்ட துள்ளலான புத்தாண்டு வாழ்த்து வீடியோ.!

Default Image

இசைஞானி இளையராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் புத்தான்டு வாழ்த்தை வீடியோ மூலம் பதிவிட்டுள்ளார். அதில் இளமை இதோ இதோ எனும் பாடலை பாடி வாழ்த்தியுள்ளார்.

1982ஆம் ஆண்டு எஸ்.பி,முத்துராமன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெளியான திரைப்படம் சகலகலா வல்லவன். இந்த திரைப்படத்தில் இசைஞானி இளையராஜா இசையில் எஸ்.பி.பி குரலில் வெளியான திரைப்பட பாடல் ‘ஹலோ எவரிபடி விஷ் யூ ஏ ஹாப்பி நியூ இயர்’ என தொடங்கும்.

அந்தாண்டு முதல் தற்போது நாளை பிறக்க போகும் புது வருடம் வரையில் இந்த பாடலை போட்டுத்தான் தமிழகத்தில் அநேக இடங்களில் கொண்டாட்டம் களைகட்ட ஆரம்பிக்கிறது. அந்தளவுக்கு ரசிகர்கள் மனதில் இந்த பாடல் நீங்க இடம் பிடித்துள்ளது.

இந்த பாடலை தற்போது இசைஞானி இளையராஜா பாடி தனது புத்தாண்டு வாழ்த்தை இளமை பொங்க தெரிவித்துள்ளார். அந்த விடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இளமை இதோ இதோ என பாடி ஹாப்பி நியூ இயர் என வாழ்த்து கூறியுள்ளார். இசைஞானியின் கொண்டாட்டமான இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

vijay - chennai hc
Dog Bite Rabies
Nikitha
TVK Vijay
TamilagaVettriKazhagam
TVK - meeting