மீண்டும் உயர்ந்த தங்கம் – சவரனுக்கு ரூ.600 உயர்வு!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்துள்ளது.
ரஷ்யா – உக்ரைன் இடையே போரால் தங்கம் விலை கிடுகிடுவென அதிகரித்து சில நாட்களாக குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் உயர்ந்துள்ளது. அந்தவகையில், இன்று சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்து, ரூ.38,504 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.75 அதிகரித்து, ரூ.4,813க்கு விற்பனையாகிறது. சென்னையின் வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு ரூ.1.10 உயர்ந்து, ரூ.70.10க்கு வர்த்தகமாகிறது. மேலும் 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ரூ.5179 க்கும் ரூ சவரன் ரூ.41432க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
“நடந்து முடிந்த குரூப் – 4 தேர்வை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும்” – தவெக பொதுச்செயலாளர்.!
July 17, 2025
எரிபொருள் சப்ளை ஸ்விட்சுகளை கேப்டன் ஆஃப் செய்தாரா? – இந்திய விமானிகள் சங்கம் கண்டனம்.!
July 17, 2025