சூர்யா அண்ணா ரசிகர்களுக்கு செம்ம விருந்து இருக்கு!- சூரி கலகல பேச்சு

சூர்யா அண்ணா ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்து இருக்கிறது என நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.
சூர்யா நடிப்பில் வரும் 10-ஆம் தேதி உலகமுழுவதும் வெளியாகவுள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கியுள்ளார். படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இந்த படத்திற்கான டிரைலர் இன்று காலை வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது.
இந்த படத்தின் டிரைலர் வெளியிட்டு விழா இன்று சென்னையில், நடைபெற்றது. விழாவில், சூர்யா, பண்டிராஜ், சத்யராஜ், பிரியங்கா மோகன், இமான், என பலர் கலந்துகொண்டார்கள். விழாவில் பேசிய, நடிகர் சூரி, ” இந்த படத்தில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குனர் பாண்டிராஜ் அவர்களுக்கு நன்றி.. சூர்யா அண்ணாவிற்கு நன்றி..மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இந்த திரைப்படத்தை அனைவரும் கண்டிப்பாக பாருங்கள்… சூர்யா அண்ணா ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்து இருக்கிறது.. அண்ணன் பாண்டியராஜ் அவர்களின் படத்தின் மிகப்பெரிய பலமே வசனம் தான்..
இந்த படத்தில் அதுமட்டுமில்லாமல் இன்றயை காலகட்டத்திற்கு தேவையான கருத்து உள்ளது மிகப்பெரிய படைப்பு இந்த படம்.. இந்த திரைப்படம் திரையரங்குகளில் அடி தூளாக இருக்கும்” என கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025