குடும்ப அட்டைகளில் இவர்களின் பெயரை நீக்கவில்லை என்றால் ரத்து – தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!

போலி குடும்ப அட்டைகளை கண்டறிய 3 மாதங்களுக்கு மேல் அத்தியாவசியப் பொருட்களை பெறாத குடும்ப அட்டைகளின் விவரங்களை சேகரிக்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள போலி குடும்ப அட்டைகளை கண்டறிய 3 மாதங்களுக்கு மேல் அத்தியாவசியப் பொருட்களை பெறாத குடும்ப அட்டைகளின் விவரங்களை பொது விநியோக தரவு தளத்தில் இருந்து பெற்று அவர்கள் குறிப்பிட்டுள்ள முகவரியில் வசிப்பதை உறுதி செய்ய வேண்டும் என சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும்,பிராக்சி முறை பரிவர்த்தனை அங்கீகாரச் சான்றின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் எனவும்,அங்கீகாரச்சன்று இல்லாமல்,பிராக்சி முறையில் குடும்ப அட்டைதாரர்கள் இன்றி பிறருக்கு பொருட்கள் வழங்கப்பட்டு,சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர் பொருட்களை பெறவில்லை என உறுதி செய்யப்படும் பட்சத்தில்,ரேசன் கடை ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும்,இறந்தவரின் பெயர் குடும்ப அட்டை மற்றும் குடும்ப அட்டை தரவு தொகுப்பில் இருந்து நீக்கம் செய்யப்படாமல் இருந்தால் அக்குறிப்பிட்ட குடும்ப அட்டையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025