பீஸ்ட் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து விக்னேஷ் சிவன் கொடுத்த அப்டேட்.!

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் வெளியாவதாக முன்னதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது..அதன்படி இப்படம் வருகின்ற ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக தகவல்கள் பரவியது.
இந்நிலையில், தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் பீஸ்ட் படம் குறித்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அடுத்த மாதம் வெளியாகவுள்ள படங்களை தேதியுடன் பதிவிட்டுள்ளார். அதில் பீஸ்ட் 13 ஆம் தேதி என்றும் அவரின் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் 28 ஆம் தேதி என்றும் உள்ளது. இதனால் ரசிகர்கள் தற்போது உற்சாகத்தில் உள்ளனர்.
மேலும் பீஸ்ட் படத்தின் அரபிகுத்து பாடலை தொடர்ந்து ஜாலியா ஜூம்கானா என்ற பாடல் வரும் 19-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த பாடலை நடிகர் விஜயே பாடியுள்ளார். கு கார்த்திக் என்பவர் பாடலை எழுதியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இன்று விண்ணில் பாய்கிறது `நிசார்’ செயற்கைக்கோள்!
July 30, 2025
தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!
July 30, 2025