இறுதி கட்டத்தில் நானே வருவேன்.! இந்த படமாவது தியேட்டரில் வருமா ரசிகர்கள் ஏக்கம்.!

Default Image

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “நானே வருவேன்”. இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை இந்துஜா நடித்து வருகிறார். இயக்குனர் செல்வராகவனும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

NaaneVaruven

இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிக்கிறார். இதற்கு முன்பு தனுஷ் -செல்வராகவன்-யுவன் கூட்டணியில் வெளியான துள்ளுவதோ இளமை. காதல்கொண்டேன், புதுப்பேட்டை ஆகிய படங்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.

இந்த படங்களை தொடர்ந்து தற்போது, மீண்டும் நானே வருவேன் படத்தில் இந்த கூட்டணி இணைந்துள்ளதால் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு மிக அதிகமாகவுள்ளது. இந்த நிலையில், நீண்ட நாட்களாக இந்த படத்தின் அப்டேட் அப்போது தான் வெளியாகும் என காத்திருந்த ரசிகர்களுக்கு செல்வராகவன் ஒரு அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.

செல்வராகவன் தனது ட்வீட்டர் பக்கத்தில் நானே வருவேன் படத்திற்கான போஸ்டரை வெளியிட்டு படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளதாக அறிவித்துள்ளார். போஸ்டரில் தனுஷ் சிகரெட்டுடன் நாற்காலியில். அமர்ந்துள்ளார். இந்த போஸ்டரை பார்த்த ரசிகர்கள் மிரண்டு விட்டார்கள்.

தனுஷ் நடிப்பில் கடைசியாக ஜகமே தந்திரம் மற்றும் மாறன் ஆகிய இரண்டு படங்களும் நேரடியாக ஓடிடியில் வெளியானதால் நானே வருவேன் திரைப்படம் திரையரங்குககளில் வெளியாகும் என எதிர்பார்த்து காத்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

eps - mk stalin
DMK - Ajithkumar
Ajith Kumar TN Govt
elon musk vs Trump
Ajith Kumar Case - Siva Gangai