Rajya Sabha: மாநிலங்களவை உறுப்பினர் தேர்ந்தெடுக்கும் முறை..!

1954 ம் ஆண்டு மாநிலங்களவைக்கு ராஜ்யசபா என்றும், மக்களவைக்கு லோக்சபா என்றும் இந்தியில் பெயரிடப்பட்டன. மாநிலங்கள் அவையின் முதல் கூட்டம் 1952ம் ஆண்டு நடைபெற்றது. மொத்தம் 250 உறுப்பினர்கள் மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆவார்கள். 238 பேர் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மூலமும், மீதமுள்ள 12 என மொத்தம் 250 உறுப்பினர்கள் மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆவார்கள்.
30 வயது முடிந்திருக்கவும் வேண்டும். மத்திய மாநில அரசாங்கத்தின் ஊதியம் பெரும் பதவியில் இருக்கக் கூடாது. குற்றவழக்கில் சிறைத்தண்டனை பெற்றவராக இருக்கக் கூடாது. மாநிலங்களவை உறுப்பினர்கள் மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களால் மறைமுகமாகத் தேர்வு செய்யப்படுவார்கள். குடியரசுத் துணைத் தலைவர் மாநிலங்களவை தலைவர் ஆவார்.
இவர் மாநிலங்களவை உறுப்பினராக இல்லை என்பதால் அவருக்கு வாக்களிக்கும் உரிமை இல்லை. மாநிலங்களவையில் சாதாரணமான மசோதா, பண மசோதா என இருவகை உள்ளன. பண மசோதா தாக்கல் மக்களவையில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட வேண்டும். இதன் பின் மாநிலங்களவைக்கு ஒப்புதலுக்கு வரும்.
ஒவ்வொரு மசோதாவும் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட பிறகுதான் அது குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்படுகிறது. ஒரு மசோதா இரு அவைகளிலும் முடிவு ஏற்படாத பட்சத்தில் குடியசுத் தலைவர் கூட்டத்தைக் கூட்டுவார். இக்கூட்டத்திற்கு மக்களவை சபாநாயகர் தலைமை தாங்குவார். மக்களவை உறுப்பினர்கள் அதிகமாக இருப்பதால் மக்களவைக்குச் சாதகமாகப் பெரும்பாலும் முடிவுகள் அமையும் என கூறப்பப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
“நடந்து முடிந்த குரூப் – 4 தேர்வை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும்” – தவெக பொதுச்செயலாளர்.!
July 17, 2025
எரிபொருள் சப்ளை ஸ்விட்சுகளை கேப்டன் ஆஃப் செய்தாரா? – இந்திய விமானிகள் சங்கம் கண்டனம்.!
July 17, 2025