எனது ட்விட்டர் கணக்கு திரும்ப தொடங்கப்பட்டாலும் நான் அதை உபயோகிக்கப்போவதில்லை – டிரம்ப் அதிரடி!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்கள் சமூக வலைத்தளமாகிய ட்விட்டரின் விதிமுறைகளை மீறியதால் அவரது ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டது.
இந்நிலையில் தற்பொழுது சமூக வலைத்தளமான ட்விட்டர் கணக்கை உலகின் நம்பர் 1 பணக்காரராகிய எலன் மஸ்க் அவர்கள் வாங்கியுள்ளார். இது குறித்து பேசிய அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் அவர்கள், ட்விட்டரை எலன் மஸ்க் வாங்கிய பிறகு தனது ட்விட்டர் கணக்கு மீண்டும் தொடங்கப்பட்டாலும் தான் மீண்டும் ட்விட்டருக்கு திரும்பப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் அடுத்த ஏழு நாட்களில் தனது சொந்த ட்ரூத் சோஷியல் ஸ்டார்ட் அப்பில் முறைப்படி அவர் இணைய போவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் எலன் மாஸ்க் குறித்து பேசியுள்ள டிரம்ப், அவர் ட்விட்டரை நன்கு மேம்படுத்துவார், எலன் ஒரு நல்ல மனிதர் என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறினால், நடவடிக்கை தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை.!
July 28, 2025
ஜம்மு காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை.., கொல்லப்பட்டவர்கள் பஹல்காம் தீவிரவாதிகளா?
July 28, 2025