திருச்சிற்றம்பலம் படத்தின் டிரைலர் எப்போது வெளியாகிறது தெரியுமா.?

தனுஷ் நடிப்பில், மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “திருச்சிற்றம்பலம்”. இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ராசிகண்ணா, பிரியா பவானி சங்கர், நித்யா மேனன் ஆகியோர் நடிக்கிறார்கள். பிரகாஷ் ராஜ், பாரதி ராஜா, உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.
படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் டிரைலர் எப்போது தான் வெளியாகும் என்று ரசிகர்கள் காத்திருந்தார்கள். அவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில், திருச்சிற்றம்பலம் படத்தின் டிரைலர் வெளியாகும் தேதியை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி, திருச்சிற்றம்பலம் படத்தின் டிரைலர் நாளை இரவு 7 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தனுஷ் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் இருக்கிறார்கள். கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான 3 படங்கள் ஓடிடியில் வெளியான நிலையில், திருச்சிற்றம்பலம் படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதால், படத்தை பார்க்க அனைவரும் ஆவலுடன் காத்துள்ளனர்.
#Thiruchitrambalam Trailer – Delivering on 7th Aug @ 7pm ! @dhanushkraja @anirudhofficial #Bharathiraja @prakashraaj @MithranRJawahar @MenenNithya @RaashiiKhanna_ @priya_Bshankar @silvastunt @omdop @editor_prasanna @jacki_art @theSreyas #ThiruchitrambalamTrailer pic.twitter.com/4tIaMNy3AK
— Sun Pictures (@sunpictures) August 5, 2022
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025