#BREAKING: ஆட்சியர்களுக்கு பரிசு..சிறப்பு நூலை வெளியிட்ட முதலமைச்சர்!

மனித உரிமை மீறல் புகார்களை சிறப்பாக கையாண்ட ஆட்சியர்கள், எஸ்பிக்களுக்கு விருது வழங்கினார் முதல்வர்.

மனித உரிமை மீறல் புகார்களை சிறப்பாக கையாண்ட ஆட்சியர்கள், எஸ்பிக்களுக்கு விருது வழங்கினார் முதல்வர்.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வரும் மாநில மனித உரிமை ஆணைய வெள்ளி விழாவில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் முக ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். அப்போது மனித உரிமை ஆணையத்தின் சார்பில் சிறப்பு நூலை முதல்வர் வெளியிட்டார். இதனையடுத்து, மனித உரிமை மீறல் புகார்களை சிறப்பாக கையாண்ட மாவட்ட ஆட்சியர்கள், எஸ்பிக்களுக்கு பரிசு மற்றும் விருதுகளை வழங்கினார் முதலவர்.

அதன்படி, மாநில மனித  ஆணைய வெள்ளி நிகழ்வில் ஆட்சியர்களுக்கு பரிசுகளை வழங்கி கவுரவித்தார். திருவாரூர், கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்களுக்கு பரிசுகளை முதலமைச்சர் வழங்கினார். மேலும், மதுரை காவல் ஆணையர், கோவை, கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு விருதுகளை வழங்கினார்.