விஷயம் தெரியாமல் வதந்தி பரப்பாதீங்க…பயங்கர கோபத்தில் விளக்கம் கொடுத்த ஆர்ச்சர்.!!

இந்த சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் வேகப்பந்து வீச்சளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். நேற்று குஜராத் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் சில தனிப்பட்ட காரணங்களால் ஜோஃப்ரா ஆர்ச்சர் விளையாடவில்லை.
இதனை தொடர்ந்து, முழங்கையில் சிறிய அறுவை சிகிச்சை செய்துகொள்வதற்காக, மும்பை வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சர் பெல்ஜியம் புறப்பட்டுச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியானது. மேலும், முழங்கையில் அறுவை சிகிச்சை செய்துகொள்வதில் ஆர்ச்சர் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளதாகவும் வதந்தி தகவல் பரவியது.
Putting out an article without knowing the facts & without my consent is crazy.
Who ever the reporter is shame on you , an already worrying and troubling time for a player and you exploit it for your personal gain, it’s people like you that are the problem .
— Jofra Archer (@JofraArcher) April 26, 2023
இந்த வதந்தி தகவலுக்கு தற்போது ஆர்ச்சர் விளக்கம் கொடுத்துள்ளார். இது தொடர்பாக தனது ட்வீட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது ” ஒரு வீரர் கடினமான நேரத்தில் இருக்கும்போது, உங்கள் தனிப்பட்ட லாபத்திற்காக எதையும் வெளியிடாதீர்கள். தன்னிடம் இருந்து எதையும் உறுதி செய்யாமல் இப்படி
செய்திகள் வெளியிடுவது, மிகவும் முட்டாள்தனமானது” என கோபத்துடன் பதிவிட்டுள்ளார்.
மேலும், நேற்று குஜராத் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வி அடைந்துள்ள நிலையில். வரும் 30ம் ராஜஸ்தான் அணியுடன் மும்பை அணி மோதுகிறது. இந்த போட்டியில் ஆர்ச்சர் கலந்துகொண்டு விளையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஈரோடு இரட்டைக் கொலை வழக்கு : 4 பேர் கைது!
May 19, 2025