குஜராத் அணி அசத்தல் வெற்றி! குதூகலத்தில் பெங்களூர், பஞ்சாப்!
குஜராத் டைட்டன்ஸ் அணியின் டெல்லி கேபிட்டல்ஸுக்கு எதிரான வெற்றியால் மூன்று அணிகள் பிளேஆஃப்க்கு தகுதி பெற்றுள்ளன.

டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எந்த அணி கோப்பையை வெல்லப்போகிறது என்கிற எதிர்பார்ப்புகளும் ஒரு பக்கம் எழுந்திருக்கிறது. ஏற்கனவே 3 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டது. நேற்று குஜராத் டைட்டன்ஸ் அணியின் டெல்லி கேபிட்டல்ஸுக்கு எதிரான வெற்றியால் மூன்று அணிகள் பிளேஆஃப்க்கு தகுதி பெற்றுள்ளன.
குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய மூன்று அணிகள் பிளேஆஃப்க்கு தகுதி பெற்றன. இந்த மூன்று அணிகளும் ஏற்கனவே புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களுக்குள் இருந்தன, ஆனால் குஜராத் டைட்டன்ஸின் இந்த வெற்றி அவர்களின் இடத்தை உறுதிப்படுத்தியது மட்டுமல்லாமல், மற்ற இரு அணிகளின் தகுதியையும் மறைமுகமாக உறுதி செய்தது. அது எப்படி என்றும் பார்ப்போம்.
குஜராத் டைட்டன்ஸ் (Gujarat Titans):
- டெல்லி கேபிட்டல்ஸுக்கு எதிரான வெற்றியால் குஜராத் டைட்டன்ஸ் அணி 16 புள்ளிகளில் இருந்து 18 புள்ளிகளை பெற்றுக்கொண்டது. குஜராத் அணியின் இந்த வெற்றி, டெல்லி கேபிட்டல்ஸின் பிளேஆஃப் வாய்ப்புகளை குறைத்து, மற்ற அணிகளுக்கு பயனளித்தது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru):
- ஆர்சிபி ஏற்கனவே நல்ல புள்ளிகளுடன் (சுமார் 14 புள்ளிகள்) இருந்தது. எனவே, குஜராத் முதல் அணியாக தகுதி பெற்ற காரணத்தால் அதற்கு கீழே இருந்த பெங்களூர் அடுத்ததாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றது.
பஞ்சாப் கிங்ஸ் :
- அதைப்போல, மூன்றாவது இடத்தில இருந்த பஞ்சாப் கிங்ஸ் அணியும் 17 புள்ளிகள் எடுத்திருந்த நிலையில், பஞ்சாப் அணியும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது.
அதே சமயம் மும்பை இந்தியன்ஸ் 14 புள்ளிகளுடன் நான்காவது இடத்திற்கு போட்டியிடுகிறார்கள், ஆனால் அவர்களின் தகுதி இன இன்னும் உறுதி செய்யப்படவில்லை அவர்களுக்கு அடுத்த இடத்தில் டெல்லி 13 புள்ளிகளுடன் இருக்கிறது. இரண்டு அணிகளும் இன்னும் 2 போட்டிகள் விளையாடவிருக்கும் நிலையில் அவர்கள் விளையாடி முடித்த பிறகு தான் எந்த அணி அடுத்த அணியாக உள்ளே நுழையப்போகிறது என்பது தெரியவரும்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஈரோடு இரட்டைக் கொலை வழக்கு : 4 பேர் கைது!
May 19, 2025