சிக்ஸர் மழைக்கு தயாராகும் சின்னசாமி ஸ்டேடியம்..! இன்று பெங்களூரு, கொல்கத்தா அணிகள் மோதல்..!

Default Image

ஐபிஎல் 2023 தொடரில் பெங்களூரில் இன்று நடைபெறும் போட்டியில் பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. 

16-வது சீசன் ஐபிஎல் தொடர் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அந்த வகையில், இன்று பெங்களூரில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் 36 வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. கடைசியாக பெங்களூரில் நடைபெற்ற ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் மேக்ஸ்வெல் மற்றும் டு பிளெசிஸ் அதிரடியாக விளையாடி, சிக்ஸர்கள் மற்றும் பவுண்டரிகள் என பறக்கவிட்டு அரைசதம் விளாசினார்.

நிதிஷ் ராணா தலைமையில் விளையாடுகின்ற கொல்கத்தா அணி, இதுவரை நடந்த 7 போட்டிகளில் 2 போட்டிகளில் வென்று புள்ளி பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது. கடைசியாக பெங்களூரூ அணிக்கு எதிராக விளையாடிய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் தோல்வியைக்கண்ட பெங்களூரூ  அணி இன்று நடைபெறவிருக்கும் ஆட்டத்தில் வெற்றிபெற முழு முனைப்போடு போட்டியிடும் என்பதில் சந்தேகமில்லை.

பெங்களூர் vs கொல்கத்தா : போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச வீரர்களின் பட்டியல்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் : 

விராட் கோலி (C), ஃபாஃப் டு பிளெசிஸ், மஹிபால் லோம்ரோர், கிளென் மேக்ஸ்வெல், ஷாபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக் (W), சுயாஷ் பிரபுதேசாய், டேவிட் வில்லி, வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், முகமது சிராஜ்.
மாற்று வீரர் – வைஷாக் விஜய்குமார்.

மும்பை இந்தியன்ஸ் :

என் ஜெகதீசன் (W), ஜேசன் ராய், வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா (C), ஆண்ட்ரே ரஸ்ஸல், ரிங்கு சிங், சுனில் நரைன், டேவிட் வைஸ், ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி. மாற்று வீரர் – சுயான்ஷ் ஷர்மா.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்