கேப்டன் மில்லர் படத்திற்கு தடை நீக்கம்.! இன்று மீண்டும் தொடங்கியது படப்பிடிப்பு…

Default Image

உரிய அனுமதி பெறாததால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கேப்டன் மில்லர் படப்பிடிப்பு, அதே இடத்தில் இன்று மீண்டும் தொடங்குகிறது.

நடிகர் தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ என்ற அதிரடி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது, இன்னும் சில வாரங்களில் படம் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென்காசி மாவட்டத்தின் வனப்பகுதியில் நடைபெற்று வந்த, ‘கேப்டன் மில்லர்’ படத்தின் முக்கிய படப்பிடிப்பு முறையான அனுமதி பெறாததால் நிறுத்தப்பட்டது.  அதாவது, தென்காசி மாவட்ட மக்கள் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக வனப்பகுதியில் விதிகளை மீறியதாகக் கூறி, ‘கேப்டன் மில்லர்’  படக்குழுவுக்கு எதிராக, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனர்.

இந்நிலையில், தொடர் புகார்கள் வந்ததால், கேப்டன் மில்லர் படப்பிடிப்பை மாவட்ட ஆட்சியர் நிறுத்துமாறு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து, படப்பிடிப்பிற்கான  தேவையான நடவடிக்கைகளை தயாரிப்பாளர்கள் எடுத்துள்ளனர். எனவே, ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு படப்பிடிப்பு அதே இடத்தில் மீண்டும் இன்று  தொடங்கப்பட்டுள்ளது.

Captian Miller
Captian Miller [Image Source : Twitter
கேப்டன் மில்லர்:

இப்படத்தில் பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கும் படத்தின் முதல் சிங்கிள் அல்லது டீசர் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்