அனைவருக்குமான நலமே இந்தியாவின் நோக்கம்.! பிரதமர் மோடி பேச்சு.!

அனைவருக்குமான நலமே இந்தியாவின் நோக்கம் என பிரதமர் மோடி 6ஆம் ஆண்டு சுகாதார மாநாட்டில் பேசினார் .
டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் ஆறாம் ஆண்டு சுகாதார மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று தொடக்க விழாவை பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்து உரையாற்றினார். சுகாதாரம் என்று வரும்போது அனைவருக்குமான ஆரோக்கியமும், நலனுமே இந்தியாவின் முதன்மை நோக்கம் என்று பிரதமர் மோடி பேசினார்.
மேலும், முழுமையான சுகாதாரம் என்பது அனைவரது உடல் நலம், மனநலம் மற்றும் சமூக நலம் ஆகியவற்றை சார்ந்தது. இப்படி இந்தியா பல்வேறு விதமான வலிமையை கொண்டு உள்ளது என்று கூறிய பிரதமர் மோடி, நம்மிடம் நிறைய திறமையும், தொழில்நுட்பமும் இருப்பதாகவும், மேலும், கடந்த கால பாரம்பரிய வரலாறு நம்மிடம் இருப்பதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டு சுகாதார மாநாடு தொடக்க விழாவில் பேசினார்.