300 கி.மீ வேகத்தில் பைக் பயணம்… 25 வயதில் உயிரிழந்த பிரபல யூடியூபர்.!!

AgastyaChauhan

பிரபல யூடியூபர் அகஸ்தியா சௌஹான் 300 கிமீ வேகத்தில் செல்ல முயன்ற  யமுனா விரைவுச் சாலையில் விபத்து ஏற்பட்டதில் உயிரிழந்தார். 

பிரபல யூடியூபரும் பைக்கருமான அகஸ்திய சௌஹான், சமூக வலைதளங்களில் ஏராளமான பின்தொடர்பவர்கள் இருந்தனர். எனவே, பைக்கில் சாகசங்கள் செய்து அதற்கான வீடியோக்களை தன்னுடைய யூடியூப் சேனல்களில் அவர் பதிவிட்டு வந்துள்ளார்.

அந்த வகையில் சமீபத்தில் யமுனா விரைவுச்சாலையின் 47 கிலோமீட்டர் மைல்கல்லில் 300 வேகத்தில் செல்ல முயன்றுள்ளார். அப்போது யமுனா எக்ஸ்பிரஸ்வேயில் மணிக்கு 300 கிலோமீட்டர் வேகத்தில் தனது பந்தய பைக்கை ஓட்டிச் சென்றபோது சாலை விபத்தில் உயிரிழந்தார்.

டிவைடரில் மோதியதில் அவரது ஹெல்மெட் உடைந்து பலத்த காயம் ஏற்பட்டது.  இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். அலிகார் மாவட்டத்தின் தப்பல் காவல் நிலையம் போலீசார்கள் சம்பவ இடத்திற்கு சென்று அவருடைய  உடலைக் கைப்பற்றினார்கள். பின்னர் பிரேதப் பரிசோதனைக்காக கிரேட்டர் நொய்டாவில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

அவர் பைக்கை ஒட்டி செல்லும் வீடியோ அவருடைய ஹெல்மெட்டில் இருந்த கேமராவில் பதிவாகியுள்ள நிலையில், அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், இந்த ஆண்டின் தொடக்கத்தில், டேராடூனில் உள்ள நகரச் சாலைகளில் பல்வேறு ஆபத்தான ஸ்டண்ட்களை நிகழ்த்தியதற்காக அகஸ்தியா மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் மோட்டார் வாகனச் சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்