சொந்த மண்ணில் மும்பையை வெளுத்து வாங்கிய சென்னை அணி.! ஃபினிஷர் தோனி ரிட்டர்ன்ஸ்.!

மும்பை கிரிக்கெட் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வீழ்த்தியது.
ஐபிஎல் தொடரின் இன்றைய 49வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய மும்பை அணி வீரர்கள் தொடக்கத்திலேயே தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர். ஆனால், மறுபக்கம் நேஹால் வதேரா நிதானமாக விளையாடி, 51 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இறுதியில் 20 ஓவர் முடிவில் மும்பை அணி 8 விக்கெட் இழந்து 139 ரன்களை எடுத்து இருந்தது.
இதில், 20 ஓவர்களில் 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் துவக்க வீரர்கள் ஆரம்பத்தில் அதிரடி கட்டி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை மும்பை அணியிடம் பறிகொடுத்தது. ருதுராஜ் கெய்க்வாட் 30 ரன்களிலும், கான்வே 44 ரன்களிலும், ரஹானே 21 ரன்களிலும், அம்பதி ராயுடு 12 ரன்களும் எடுத்து இருந்தனர்.
இறுதியாக, தோனி வெற்றிக்கு தேவையான 2 ரன்களை அடித்து ஆட்டத்தினை முடித்து வைத்தார். ஷிவம் துபே 26 ரன்களுடம் களத்தில் இருந்தார். இறுதியாக சென்னை அணி தனது சொந்த மண்ணில் மும்பையை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாதனை படைத்துள்ளது.