ஜவான் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு…கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!!

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஜவான். இந்த திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.
மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி உள்ள நிலையில் தற்போது படத்திற்கான ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த திரைப்படம் வருகின்ற செப்டம்பர் மாதம் 7-ஆம் தேதி திரையரங்குகளில் தமிழ்,தெலுங்கு,கன்னடம்,இந்தி, மலையாளம், ஆகிய மொழிகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திடீரென ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் ஷாருக்கான் ரசிகர்கள் தற்பொழுது மிகவும் உற்சாகத்தில் உள்ளனர். விரைவில் திரைப்படத்திற்கான ட்ரெய்லர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#Jawan #7thSeptember2023 worldwide pic.twitter.com/jb8hwmVnIP
— atlee (@Atlee_dir) May 6, 2023