200 வலது கால் ஷூக்களை மட்டும் திருடிய மர்ம கும்பல்.! அதன் மதிப்பு மட்டுமே 10 லட்சமாம்.!

SHOE THEFT IN PERU

பெரு நாட்டில் ஒரு திருட்டு கும்பல் கடைக்குள் புகுந்து 200 வலது கால் ஷூக்களை மட்டும் திருடியுள்ளனர். 

பெருவில் ஒரு ஷூ விற்பனை கடையில் வினோதமான திருட்டு சம்பவம் அண்மையில் நிகழ்ந்துள்ளது. அதில், 3 பேர் அடங்கிய ஒரு திருட்டு கும்பல் வந்து , கதையினை சேதப்படுத்தி, ஒரு வாகனத்தில் 200 உயர் ரக ஷூக்களை களவாடியுள்ளனர்.

இதில், வேடிக்கை என்னவென்றால், அவர்கள் திருடி சென்ற 200 ஷூக்களும் வலது கால் உடையது. அது திருடிய அவர்களுக்கும் பயன்படாது, மீதம் இருக்கும் ஷூக்கள் கடை உரிமையாளர்களுக்கும் பயன்படாது. அவர்கள் திருடிய ஷூக்களின் மதிப்பு 13 ஆயிரம் டாலர்கள் ஆகும். இதன் இந்திய மதிப்பு  10 லட்ச ரூபாய் ஆகும். இந்த திருட்டு சம்பவமானது கடையில் உள்ள கேமிராவில் பதிவாகியுள்ளது.  அதனை கொண்டு பெரு நாட்டின் போலீசார் திருட்டு கும்பலை தேடி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்