கர்நாடக தேர்தல் – கோவாவில் நாளை ஊதியத்துடன் கூடிய விடுமுறை!

கர்நாடக தேர்தல் நாளில் கோவாவில் ஊதியத்துடன் கூடிய விடுமுறையை அறிவித்தார் அம்மாநில முதலமைச்சர் பிரமோத் சாவந்த்.
கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நாளை கோவாவில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் மே 10-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், நேற்று மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது.
பாஜக, காங்கிரஸ், மஜத முக்கிய கட்சிகளாகப் போட்டியிடும் இத்தேர்தலில், பகுஜன் சமாஜ், சிபிஐ, சிபிஎம், இந்திய குடியரசுக் கட்சி உள்ளிட்ட கட்சிகளும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. இந்த நிலையில், கர்நாடக தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், கோவாவில் உள்ள பாஜக அரசு ஊதியத்துடன் கூடிய விடுமுறையை அறிவித்துள்ளது.
அண்டை மாநிலமான கர்நாடகாவில் தேர்தல் நடக்கும் நிலையில், கோவாவுக்கு விடுமுறை அறிவித்துள்ளார் முதல்வர் பிரமோத் சாவந்த். இது தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை தொழிலாளர்களையும் உள்ளடக்கும், கர்நாடகாவில் சட்டமன்றத் தேர்தலுக்கு வாக்களிப்பதைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. கோவாவில் முதலமைச்சர் விடுமுறை அறிவித்ததற்கு, எதிர்க்கட்சிகள் மற்றும் அம்மாநில தொழிற்கூட்டமைப்பு தலைவர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.