பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தனி வரிசை.! நாளை மறுநாள் டிக்கெட் விற்பனை.! சிஎஸ்கே அறிவிப்பு.!

CSK

சென்னையில் வரும் மே 14 அன்று நடைபெற உள்ள போட்டிக்கு நாளை மறுநாள் டிக்கெட் விற்பனை துவங்கப்பட உள்ளது. 

இந்த வருட ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடர் மார்ச் இறுதியில் துவங்கி 10 அணிகளும் தங்கள் முக்கால்வாசி போட்டிகளை நிறைவு செய்துள்ளன. தற்போது நடைபெறும் போட்டிகள் அந்தந்த அணிகளின் தகுதிச்சுற்று (பிளே ஆஃப்) வாய்ப்புக்கு வழிவகுக்கும் என்பதால் போட்டிகள் மிக கடுமையாக சென்று கொண்டு இருக்கின்றன.

சென்னை அணியானது தற்போது வரையில் 11 போட்டிகளில் 6 போட்டிகளில் வென்று 13 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. இன்று டெல்லி அணியுடன் சென்னை அணி பலப்பரீட்சை நடந்தஉள்ளது. அதனை அடுத்து வரும் மே 14ஆம் தேதி ஞாயிற்று கிழமை இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கொல்கத்தா அணியுடன் மோத உள்ளது.

மே 14ஆம் தேதிக்கான போட்டியின் டிக்கெட் விற்பனை நாளை மறுநாள் (மே 12) துவங்க உள்ளது என சென்னை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கு முன் நடத்தபட்ட போட்டிகளில்  பெண்களுக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கு தனிவரிசை இல்லை என பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் அதற்கான தீர்வு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, 12ஆம் தேதி நேரடி டிக்கெட் விற்பனையின் பொது, 2 ஆயிரம் டிக்கெட்கள் பெண்களுக்கு என தனி வரிசையிலும், மாற்று திறனாளிகளுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கை டிக்கெட்டுகள் தனி வரிசையிலும் விற்பனை செய்யப்பட உள்ளன என சென்னை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.  இந்த டிக்கெட் விற்பனையானது நாளை மறுநாள் காலை 9.30 மணிக்கு துவங்கப்பட உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்