நிலக்கரி சுரங்க எல்லை பிரச்சனை: பாகிஸ்தான் துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் பலி.!

பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்கத்தை எல்லை நிர்ணயம் செய்வது தொடர்பாக 2 பழங்குடியினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 15 பேர் பலியாகியுள்ளனர்.
பாகிஸ்தானின் வடமேற்கு பிராந்தியத்தில் நிலக்கரி சுரங்கத்தை எல்லை நிர்ணயம் செய்வதில் நேற்று சன்னி கேல் மற்றும் ஜர்குன் கேல் சமூகத்தினருக்கு இடையே சண்டை ஏற்பட்டது. இதில், இரு தரப்பினர் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் உயிரிழந்தனர்.
சுரங்க எல்லை நிர்ணயம் தொடர்பாக கோஹாட் மாவட்டத்தில் பெஷாவரில் இருந்து தென்மேற்கே 35 கிமீ தொலைவில் உள்ள தர்ரா ஆடம் கெக் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.
மேலும் இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்கள் பெஷாவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். காயமடைந்தவர்களின் எண்ணிக்கை சரியாக தெரியவில்லை, ஆனால் துப்பாக்கிச் சண்டையில் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக தர்ரா ஆதம் கேல் காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. நிலக்கரி சுரங்கத்தின் எல்லை நிர்ணயம் தொடர்பாக சன்னிகேல் மற்றும் ஜர்குன் கெல் பழங்குடியினருக்கு இடையே கடந்த இரண்டு ஆண்டுகளாக தகராறு நீடித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.