ஒடிசா ரயில் விபத்து..! நிலைமையை நேரில் சென்று பார்வையிடுகிறார் முதல்வர் மம்தா பானர்ஜி..!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று ஒடிசாவிற்குச் நேரில் சென்று நிலைமையை பார்வையிட்டு காயமடைந்தவர்களைச் சந்திக்க உள்ளார்.
ஒடிசாவின் பஹானாகா ரயில் நிலையம் அருகே நேற்று கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஹவுரா ரயில் மற்றும் சரக்கு ரயில் ஆகிய 3 ரயில்கள் ஒன்றின் மீது ஒன்று மோதி பெரும் விபத்துக்குள்ளானது. இதில் இதுவரை 238 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 900-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், நிலைமையை ஆய்வு செய்ய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஒடிசாவின் பாலசோருக்கு வருகை தருகிறார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று ஒடிசாவின் பாலசோருக்குச் சென்று நிலைமையை நேரில் சென்று பார்வையிடுவார். மேலும் காயமடைந்தவர்களைச் சந்திக்க உள்ளார்.