வாய பொளக்குற விலைக்கு புதிய சாம்சங் OLED டிவி.! சிறப்பு என்ன…?

உங்க வீட்டில் புதிய டிவி வாங்கணும் வெய்டிங்கா? அப்போ ஒரு அதிரடியான டிவி உங்களுக்காக காத்திருக்கிறது. சாம்சங் நிறுவனம் இந்தியாவில் ஒரு புதிய OLED டிவிகளை சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. அண்ட் புதிய சாம்சங் ‘OLED TV’ அனைத்து மாடல்களும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை.

ஓஎல்இடி OLED ஸ்மார்ட் டிவிகளின் வரம்பை விரிவுபடுத்துவதும் நோக்கத்தில், எஸ்95சி (S95C) மற்றும் எஸ்90சி (S90C) ஆகிய இரண்டு சீரீஸின் கீழ், வெவ்வேறு ஸ்க்ரீன் அளவுகளில் அறிமுக செய்யப்பட்டுள்ளது.
இதன் விலை ஷாக் கொடுக்கற அளவுக்கு தான் இருக்கிறது. இதன் விலை ரூ.1,69,990 முதல் தொடங்குகிறது. அந்த அளவுக்கு என்ன சிறப்பு என்பதை இதில் பார்க்கலாம்.

என்னென்ன அளவுகள் எங்கு வாங்கலாம்:
சாம்சங் ஓஎல்இடி (OLED) ஸ்மார்ட் டிவி S95C மற்றும் S90C. இரண்டு சீரிஸில் மூன்று அளவுகளில் கிடைக்கின்றன. அதாவது, 77-இன்ச், 65-இன்ச் மற்றும் 55-இன்ச் ஆகிய அளவுகளில் கிடைக்கிறது. இந்தத் சீரிஸின் ஆரம்ப விலை ரூ.169,990 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் இந்த டிவிகளை இந்தியா முழுவதிலும் உள்ள முன்னணி சில்லறை விற்பனைக் கடைகளில் இருந்தும், Samsung.com லும் வாங்கலாம்.

ஆர்வமுள்ள வாடிக்கையாளர்களுக்கு சாம்சங் சிறப்பு சலுகையையும் அறிவித்துள்ளது. முன்னணி வங்கி கிரெடிட் கார்டுகள் மூலம் வாங்கினால் 20 சதவீதம் வரை கேஷ்பேக் கிடைக்கிறது. கூடுதலாக, ரூ.2,990 முதல் EMI விருப்பங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து OLED TV மாடல்களும் 2 வருட வாரண்டியுடன் வருகின்றன.
- 2,030 பான்டோன் நிறங்கள் மற்றும் 110 ஸ்கின் டோன் ஷேட்களின் துல்லியமான பிரதிநிதித்துவத்துடன், இந்த டிவியில் ஒளிபரப்பாகும் காட்சிகள் பார்வையாளர்களுக்கு உண்மையிலேயே யதார்த்தமான காட்சி அனுபவத்தை வழங்கும்.
- இதில், HDR OLED+ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேம்படுத்தப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் ஒவ்வொரு காட்சிகளும் அப்படி ஒரு தனி பீல் கிடைக்குமாம்.
- நியூரல் குவாண்டம் ப்ராசஸர் 4K வசதியுடன் வருகிறது. இந்த மேம்பட்ட செயலி, AI-அடிப்படையிலான அல்காரிதம்களைப் பயன்படுத்தி, காட்சி மூலம் உள்ளடக்கக் காட்சியை பகுப்பாய்வு செய்கிறது.
- இந்த மாடலில் வயர்லெஸ் டால்பி அட்மோஸ் மற்றும் OTS+ தொழில்நுட்பம் உள்ளது. இது அதிவேக ஒலி மற்றும் பார்க்கும் அனுபவத்தை வழங்குகிறது.
- கூடுதலாக, குறைந்தபட்ச விசைகளுடன் சூரிய சக்தியில் இயங்கும் ரிமோட் வசதியும் கிடைக்கிறது.
- இந்த பேட்டரி இல்லாத ரிமோட்டை வீட்டில் இருக்கும் மின்சார விளக்குகளிருந்து உமிழப்படும் மின்காந்த அலைகளைப் பயன்படுத்தி கூட சார்ஜ் செய்ய முடியும்.
- 144Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் கேம் பார், மினி மேப் ஜூம் மற்றும் விர்ச்சுவல் ஏம் பாயிண்ட் போன்ற கூடுதல் அம்சங்களுடன், விளையாட்டாளர்கள் த்ரில்லான மற்றும் அதிவேகமான கேமிங் அனுபவத்தை பெறலாம்.