இந்த படத்தை பார்த்து தான் சினிமாவுக்கு நடிக்க வந்தேன்…மனம் திறந்த நடிகை சுனைனா.!!

நடிகை சுனைனா தற்போது ரெஜினா திரைப்படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஜூன் மாதம் 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு படத்தின் ட்ரைலர் மட்டும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சுனைனா மற்றும் ரெஜினா படக்குழுவினரும் கலந்துகொண்டார்கள்.

சிறப்பு விருந்தினராக தளபதி 68 இயக்குனர் வெங்கட் பிரபுவும் கலந்துகொண்டார். இந்த நிலையில், நிகழ்ச்சியில் பேசிய நடிகை சுனைனா ” 2006 அந்த காலகட்டத்தில் நான் சிறிய பெண்ணாக இருந்தேன். அப்போதே நான் என்னுடைய எதிர்காலத்தை பற்றி யோசித்து கொண்டிருந்தேன்.

அப்போதே நான் முடிவு செய்தேன் தென்னிந்திய சினிமாவில் நடிக்க வேண்டும் என்று, ஒரு நாள் தொலைக்காட்சியில் சந்திரமுகி திரைப்படம் பார்த்துக்கொண்டிருந்தேன். அந்த படத்தை பார்த்த பிறகு தான் நான் சினிவிற்குள் நுழையவேண்டும் என்ற ஆசை வந்தது.

படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார் சூப்பராக நடித்திருப்பார். நடிகையாக ஆசை வந்ததும் நான் ரஜினி சார் படங்கள் மற்றும் சூர்யா சார் படங்கள் தான் அதிகமாக பார்த்திருக்கேன். இவர்களுடைய படங்களை பார்த்த பிறகு தான் சினிமாவிற்குள் நடிக்கவேண்டும் என்ற ஆசை வந்தது.” என கூறியுள்ளார்.

மேலும் ரெஜினா படத்தை பற்றி பேசிய சுனைனா ” ரெஜினா திரைப்படம் நன்றாக வந்துள்ளது. படைத்தை பாருங்கள் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும். இந்த விளைவிக்கரு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டதற்கு வெங்கெட் பிரபு சாருக்கு மிகவும் நன்றி” என கூறியுள்ளார்.