கோலியிடம் எச்சரிக்கையாக இருங்கள்.! வார்னிங் கொடுத்த ஆஸ்திரேலிய பத்திரிகையாளர்.!

VK AUS Warning

விராட் கோலியிடம் கவனமாக இருக்கும்படி ஆஸ்திரேலிய வீரர்களுக்கு எச்சரிக்கை கொடுத்த ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் கிதியோன் ஹை.

கிரிக்கெட் ரசிகர்களின் பெரிதும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, நாளை லண்டன் ஓவல் மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்திற்காக பலப்பரீட்சை நடத்துகின்றன.

இரண்டாவது முறையாக இந்திய அணியும், முதன்முறையாக ஆஸ்திரேலியாவும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. இந்த போட்டி நாளை தொடங்கி ஜூன் 11 வரை நடைபெறுகிறது. இரு அணிகளும் இதற்காக தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போட்டிக்கு முன்னதாக ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் கிதியோன் ஹை, விராட் கோலி குறித்து ஆஸ்திரேலிய வீரர்களுக்கு எச்சரிக்கை கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, விராட் கோலி தான் இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வெல்வதில் முக்கிய பங்காற்றுவார்.

விராட் கோலி ஐபிஎல் தொடரிலிருந்து நல்ல பார்மில் இருக்கிறார், பெங்களூரு அணி, ஐபிஎல் பிளேஆஃப்-இல் இருந்து வெளியேறினாலும் விராட் தொடர்ச்சியாக இரண்டு சதங்கள் என அருமையாக விளையாடியுள்ளார். இது அவரது ரசிகர்களுக்கு மேலும் புத்துணர்ச்சியை அளித்துள்ளது என்றே கூறலாம்.

மேலும் விராட் கோலி எப்போதும் கிளாசிக்(Orthodox) கிரிக்கெட் ஷாட்களை அடிப்பதில் வல்லவர். டி-20 கிரிக்கெட்டில் கூட பாரம்பரிய கிரிக்கெட் ஷாட்களை(கவர் ட்ரைவ், ஸ்ட்ரைட் ட்ரைவ் உள்ளிட்ட ஷாட்கள்) அடிப்பதில் விருப்பம் கொண்ட விராட் கோலிக்கு டெஸ்ட் கிரிக்கெட் சொல்லவே வேண்டாம், அது அவருக்கு அல்வா சாப்பிடுவது போல்.

இதனால் விராட் கோலி, ஓவல் மைதானத்தில் நடக்கும் டெஸ்ட் உலகக்கோப்பை இறுதிப்போட்டியை மிகவும் எதிர்பார்த்து கொண்டிருப்பார். டெஸ்ட் போட்டியில் விராட் கோலியும் சமீப காலங்களில் நல்ல பார்மிலும் இருக்கிறார். அது இந்திய அணிக்கு கூடுதல் பலமாக இருக்கும்.

விராட் கோலி ரன்கள் குவிக்க ஆரம்பித்துவிட்டால், இந்திய அணி நிச்சயம் மிகப்பெரிய ஸ்கோரை குவிக்கும். இது ஆஸ்திரேலிய அணிக்கு தான் சிக்கலை ஏற்படுத்தும். இதனால் விராட் கோலியிடம் ஆஸ்திரேலிய அணியினர் கவனமாக இருக்குமாறும், அவரது விக்கெட்டை விரைவில் எடுக்கவேண்டுமென ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்