இது என்னமா டிரஸ்..? ராஷ்மிகா மந்தனாவை கலாய்க்கும் நெட்டிசன்கள்.!!

ரசிகர்களால் அன்போடு நேஷனல் க்ரஷ் என்று அழைக்கப்படும் நடிகை ராஷ்மிகா மந்தனா அவ்வப்போது தன்னுடைய சமூக வலைதளபக்கங்களில் வெளியீட்டு வருகிறார். கடந்த வாரம் கூட தனது சொந்த ஊரான கூர்க்கில் இருந்து கையில் பூ ஒன்றை வைத்துக்கொண்டு அந்த புகைப்படத்தை வெளியீட்டு இருந்தார். அந்த புகைப்படமும் கூட மிகவும் ட்ரெண்ட் ஆனது.

அதனை தொடர்ந்து நேற்று ராஷ்மிகா மந்தனா தனது சமூக வலைதள பக்கங்களில் வீடியோ ஒன்றை வெளியீட்டு இருந்தார். அந்த வீடியோவில் இருந்து எடுக்கப்பட்ட சில ராஷ்மிகா மந்தனாவின் புகைப்படங்கள் இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. ராஷ்மிகா மந்தனா பெயர் தான் டிவிட்டரில் ட்ரெண்டிங்கில் கூட தற்போது உள்ளது.

புகைப்படத்தில் ரஷ்மிகா அழகாக இருந்தாலும் கூட, அவர் போட்டிருக்கும் உடை சற்று காமெடியாக இருப்பதாக ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள். ஒரு சிலர் இது என்னமா டிரஸ்..? புதுசா இருக்கு எனவும், மேலும் சிலர் உங்களுடைய போஸ் ஷாருக்கானின் சின்னமான போஸ் போல் தெரிகிறது எனவும் கூறி வருகிறார்கள்.
It’s looking like Srk’s iconic pose ♥️????????hehehheee…. Kidding….
I love u itna Sara…. ????♥️good morning ????@iamRashmika #RashmikaMandanna pic.twitter.com/87viDF2uTm— Rashmika Bangladeshi Fc ♥️ (@rashmikafansbd) June 6, 2023
மேலும், நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக புஷ்பா 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே முதல் பாகம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாவதை பாகத்தை பார்க்கவும் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்துள்ளனர்.