32 ஆண்டுகளுக்குப் பின் ரஜினியுடன் இணையும் அமிதாப் பச்சன்.! வெளியான சூப்பர் தகவல்.!

தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் ரஜினிகாந்த் மற்றும் பாலிவுட்டில் உச்சத்தில் இருக்கும் அமிதாப் பச்சன் இருவரும் 32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரு படத்தில் இணைவதாக கூறப்படுகிறது. அதாவது, ரஜினி நடிக்கவுள்ள 170-வது படத்தில் தான் அமிதாப் பச்சன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக இணையவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.
தற்காலிகமாக தலைவர் 170 என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை டி.ஜே.ஞானவேல் இயக்குகிறார். படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார்.
இந்த நிலையில், ரஜினிகாந்த் மற்றும் அமிதாப் பச்சன் இரண்டு நடிகர்களும் இந்த படத்தில் இணையும் செய்தி இணையத்தில் புயலை கிளப்பியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து முடித்து லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு தன்னுடைய 170-வது படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், நடிகர் ரஜினிகாந்துடன் அமிதாப் பச்சன் கடைசியாக கடந்த 1991-ஆம் ஆண்டு வெளியான ஹம் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து தற்போது 32 ஆண்டுகளுக்கு பிறகு
#Thalaivar170 update:
Bollywood Stalwart #AmitabhBachchan to play a pivotal role in superstar #Rajinikanth‘s 170th film.
Blockbuster combo will be back after 1991’s Hum.
This will be their first straight Tamil film for Amitabh as well as this combo.
To be directed by #JaiBhim… pic.twitter.com/QMdcLFFGLF
— Manobala Vijayabalan (@ManobalaV) June 9, 2023
After more than three decades, India’s Top Superstars @SrBachchan and @rajinikanth are joining for @LycaProductions and Dir @tjgnan ‘s #Thalaivar170
An Exciting development.. Official announcement soon.. pic.twitter.com/VaMm8bBHGE
— Ramesh Bala (@rameshlaus) June 10, 2023