அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை.!

அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தமிழக அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக் மற்றும் அவரது உறவினர்கள், ஒப்பந்ததாரர்கள் வீடுகள் உட்பட 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதில் சில இடங்களில் ஒரு வாரத்திற்கும் மேலாக சோதனைகள் நீடித்தன.
தற்போது வருமானவரித்துறை சோதனையை தொடர்ந்து, மத்திய அமலாக்கத்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டில் இன்று சோதனையை மேற்கொண்டு உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக வருமான வரித்துறை சோதனையின் போது , அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் கூறுகையில், தாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. இந்த சோதனையை சட்டப்படி எதிர்கொள்வோம் என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.