டெல்லியை பந்தாடி த்ரில் வெற்றி…முதல் அணியாக பிளே ஆஃப்க்கு தகுதி பெற்ற குஜராத்!

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற குஜராத் டைட்டன்ஸ், ஐபிஎல் 2025 பிளே ஆஃப்க்கு முதல் அணியாக தகுதி பெற்று அசத்தியுள்ளது.

GT WIN

டெல்லி : அருண் ஜெய்ட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி அதிரடியாக விளையாடியது என்று சொல்லாம். டெல்லி அதிரடியாக விளையாடியது என்று சொல்லியதை விட தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி கே.எல்.ராகுல் பட்டையை கிளப்பினார் என்று சொல்லலாம்.

ஏனென்றால், இதுவரை இந்த சீசன் மிடில் ஆர்டரில் களமிறங்கி வந்த கே.எல்.ராகுல் குஜராத்துக்கு எதிரான இந்த போட்டியில் ஓப்பனிங் இறங்கி அதிரடி காட்டினார். 65 பந்துகளில் 112 ரன்கள் எடுத்த காரணத்தால் தான் 20 .ஓவர்கள் முடிவில் குஜராத் அணியால் 199 ரன்கள் எடுக்க முடிந்தது. அடுத்ததாக 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கிய நிலையில், நீங்க மட்டும் தான் அதிரடி காட்டுவீங்களா? நாங்களும் காட்டுவோம் என்பது போல அதிரடியாக விளையாடினார்கள் என்று தான் சொல்லவேண்டும்.

ஏனென்றால், தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சாய் சுதர்சன், சுப்மன் கில் இருவரும் ஆட்டமிழக்காமல் நாங்களே போட்டியை முடித்து கொடுக்கிறோம் என்பது போல விளையாடியுள்ளனர். ஒரு பக்கம் சுப்மன் கில் 93*அதிரடியதாக விளையாட மற்றோரு பக்கம் சாய் சுதர்சன் 108 ரன்கள் விளாச குஜராத் 19ஓவர்கள் முடிவில் 205 ரன்கள் எடுத்து அசத்தலாக வெற்றியை பெற்றது.

இந்த வெற்றி, குஜராத்தை புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு உயர்த்தியது மட்டுமல்லாமல், ஐபிஎல் 2025 பிளே ஆஃப்க்கு முதல் அணியாக தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது. 18 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கும் குஜராத் அணி இன்னும் 2 போட்டிகளும் விளையாடவிருக்கிறது. அந்த போட்டிக்களிலும் வெற்றிபெற்றால் 22 புள்ளிகளை பெறலாம்.

அதே சமயம், இந்த போட்டியில் டெல்லி அணி தோல்வி அடைந்த நிலையில் புள்ளி விவரப்பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. டெல்லி அணி இதுவரை 13 புள்ளிகள் பெற்றிருக்கும் நிலையில் இன்னும் அவர்களுக்கு 2 போட்டிகள் மீதமுள்ளது. அந்த போட்டியில் வெற்றிபெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல வாய்ப்பு ஏற்படலாம். எனவே, பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்