மகாராஷ்டிரா : விருப்பமுள்ள முதல்வர் பட்டியலில் துணை முதல்வருக்கு முதலிடம்.! ஏக்நாத் ஷிண்டேவுக்கு 4வது இடம்.!

மகாராஷ்டிராவில் ஓர் தனியார் கருத்துக்கணிப்பில் விருப்பமுள்ள முதல்வர் பட்டியலில் துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் முதலிடம் பிடித்துள்ளார்.
தனியார் செய்தி நிறுவனம் ஒன்று அண்மையில் ஓர் கருத்துக்கணிப்பில் ஈடுபட்டது. அதில் மகராஷ்டிரா மாநிலத்தில் யாரை முதல்வராக மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்பதுபோல அந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.
இதில் சிவசேனா கட்சியுடன் கூட்டணி வைத்து துணை முதல்வராக பொறுப்பில் இருக்கும் பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் 35 சதவீதம் வாக்குகள் பெற்று முதலிடத்தில் இருக்கிறார். அடுத்த இடத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் அசோக் சவான் இருக்கிறார். மூன்றாவது இடத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜித் பவார் இருக்கிறார். நான்காவது இடத்தில் தான் மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இருக்கிறார். அவர் 12 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்று இருக்கிறார்.