#KenyaRoadAccident: கட்டுப்பாட்டை இழந்த லாரி…கென்யா சாலை விபத்தில் 48 பேர் பலி!

கென்யாவில் கட்டுப்பாட்டை இழந்த லாரி பல வாகனங்கள் மீது மோதிய விபத்தில் 48 பேர் பலியாகினர்.
மேற்கு கென்யாவில் லண்டியானி சந்திப்பு என அழைக்கப்படும் பரபரப்பான பகுதியில் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மற்ற வாகனங்கள் மற்றும் சாலையோர நின்றவர்கள் மீது மோதியதில் சுமார் 48 பேர் உயிரிழந்ந்துள்ளனர் அப்பகுதி காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. கெரிச்சோவை நோக்கி சென்றுகொண்டிருந்த அந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து பல வாகனங்கள் மற்றும் சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது வேகமாக மோதி விபத்துக்கு நேரிட்டது.
அதாவது, கட்டுப்பாட்டை இழந்து லாரி, 8 வாகனங்கள், பல மோட்டார் சைக்கிள்கள், சாலையோரம் இருந்தவர்கள், விற்பனையாளர்கள் மற்றும் பிற வணிகங்களில் இருந்தவர்கள் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதனால் பல்வேறு வாகனங்கள் சேதமடைந்தன. இந்த கோர விபத்தில் 48 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த கோர விபத்தில் சிக்கிய 30 பேர் படுகாயம் அடைந்து பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனால் பலி மேலும் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்புப் பணிகளைத் தொடர்ந்து விபத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணை நடத்தப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் கிப்சும்பா முர்கோமென் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அந்நாட்டு அதிபர் வில்லியம் ரூட்டோ உள்பட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.