மூன்றாவது முறையாக டயமண்ட் லீக் போட்டியில் முதலிடம்.! ஒலிம்பிக் நாயகன் நீரஜ் சோப்ரா சாதனை.!

மூன்றாவது முறையாக டயமண்ட் லீக் தொடரில் ஈட்டி எறிதலில் போட்டியில் முதலிடம் பிடித்தார் ‘ஒலிம்பிக் நாயகன்’ நீரஜ் சோப்ரா.
சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும் டைமண்ட் லீக் தடகள தொடரில் இந்திய ஒலிம்பிக் வீரர் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் முதலிடம் பெற்றுள்ளார். ஒலிம்பிக் சாம்பியனான நீரஜ் சோப்ரா இதற்கு முன்னர் இரண்டு டைமன்ட் லீக் தொடரில் முதலிடம் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆகஸ்ட் 2022 இல் லொசானில் நடந்த டயமண்ட் லீக் தொடர் மற்றும் சூரிச்சில் நடந்த டயமண்ட் லீக் இறுதி வெற்றிக்குப் பிறகு நீரஜ் சோப்ரா டயமண்ட் லீக் தொடரில் முதலிடம் பிடித்தது இது மூன்றாவது முறையாகும்.
2023 டைமண்ட் லீக் தடகள தொடரில் நீரஜ் சோப்ராவை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் ஜெர்மனியை சேர்ந்த ஜூலியன் வெபர், செக் குடியரசை சேர்ந்த ஜக்கு வாட்லெட்ஜ் மூன்றாவது இடத்தையும் பிடித்தார்கள்.