புதுக்கோட்டை : பேருந்து நிறுத்தத்தில் நின்றவர்கள் மீது கார் மோதி கோர விபத்து.! 4 பேர் உயிரிழப்பு.!

விராலிமலை – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்து காரணமாக 4 பேர் உயிரிழந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் லஞ்சமேடு பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு இருந்தவர்கள் மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விராலிமலை – மதுரை நெடுஞ்சாலையில் மதுரையிலிருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த கார் விபத்தை ஏற்படுத்தியுள்ளது.
லஞ்சமேடு பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து நிறுத்தத்தில் இருந்தவர்கள் மீது மோதியது. அதில் சம்பவ இடத்திலேயே நான்கு பேர் உயிரிழந்தனர். காரில் பயணம் செய்த ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காரில் பயணத்தவர்கள் விவரங்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.