விம்பிள்டன் இறுதிப்போட்டி; டென்னிஸ் ராக்கெட்டை உடைத்த ஜோகோவிச்சிற்கு அபராதம்.!

Djokovic Fined

விம்பிள்டன் இறுதிப்போட்டியில் தனது டென்னிஸ் ராக்கெட்டை உடைத்த ஜோகோவிச்சிற்கு ரூ. 6.5 லட்சம் அபராதம்.

லண்டனில் நேற்று நடைபெற்ற விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவு டென்னிஸ் தொடரின் இறுதி போட்டியில், ஜோகோவிச் இளம் வீரரான அல்காரஸ் உடன் மோதினார். பரபரப்பான ஆட்டத்தில் 20 வயதான இளம் வீரர் அல்காரஸ் முதன்முதலாக ஜோகோவிச்சை வீழ்த்தி விம்பிள்டன் பட்டத்தை வென்றார்.

இந்த போட்டியில் தோல்வியடைந்த ஜோகோவிச், தனது டென்னிஸ்(பேட்) ராக்கெட்டை நெட் போஸ்ட்டில் அடித்து நொறுக்கியதற்காக $8,000 (ரூ.6.5 லட்சத்திற்கும் மேல்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில், ராக்கெட்டை அடித்து நொறுக்கியதற்கு  வருத்தம் உள்ளதா என்று கேட்கப்பட்ட போது, அப்போது விரக்தியில் இருந்ததாக ஜோகோவிச் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்