76-வது சுதந்திர தினவிழா – 3 நாட்கள் ஒத்திகை நிகழ்ச்சி..!

நாடு முழுவதும் வரும் 15-ஆம் தேதி நாட்டின் 76வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த சுதந்திர தினவிழாவை முன்னிட்டு, சென்னை ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஸ்டாலின் தேசியக் கொடி ஏற்ற உள்ளார்.
இந்த நிலையில், சுதந்திர தினவிழாவை முன்னிட்டு, இன்றும், ஆக.10, 13 ஆகிய 3 நாட்களுக்கு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. தலைமை செயலகம் அமைந்துள்ள காமராஜர் சாலையில் முதல் நாள் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இன்று நடைபெறவுள்ள ஒத்திகை நிகழ்ச்சியானது வாகன அணிவகுப்புடன் முதல்வரை அவரது இல்லத்திலிருந்து அழைத்து வருவது போல நடைபெறவுள்ளது. இதனையடுத்து, காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“நடந்து முடிந்த குரூப் – 4 தேர்வை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும்” – தவெக பொதுச்செயலாளர்.!
July 17, 2025
எரிபொருள் சப்ளை ஸ்விட்சுகளை கேப்டன் ஆஃப் செய்தாரா? – இந்திய விமானிகள் சங்கம் கண்டனம்.!
July 17, 2025