மும்பையில் உள்ள பிரபல ஹோட்டலில் தீ விபத்து: 3 பேர் பரிதாப மரணம்!

மும்பையில் உள்ள கேலக்ஸி ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையின் சான்டாக்ரூஸ் பகுதியில் அமைந்துள்ள ஹோட்டலில் நேற்று பிற்பகல் 1 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில், காயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தீயை அணைக்க நான்கு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தண்ணீர் டேங்கர்கள் மூலம் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தீ விபத்து வழிமுறைகளை முறையாக கடைப்பிடிக்காததே விபத்திற்கு காரணம் என கூறப்படுகிறது. இந்த விபத்து தொடர்பாக விடுதி நிர்வாகத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.