உ,பி : சிறுவனை, சக மாணவர்களால் அடிக்க வைத்த ஆசிரியர்.! வீடியோ வெளியிட்ட இஸ்லாமியர் மீது வழக்குப்பதிவு.!

சில தினங்களுக்கு முன்னர் இணையத்தில் ஒரு வீடியோ மிகவும் வேகமாக பரவியது. அந்த வீடியோவில், ஒரு வகுப்பறையில், ஒரு இஸ்லாமிய மாணவரை , வகுப்பாசிரியர் கூறியதன் பெயரில் சக மாணவர்கள் அடிக்கும் வீடியோ பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பிரிவினைவாதத்தை தடுக்கும் பள்ளியில் நடந்த இதுபோன்ற சம்பவம் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டது.
உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் நடந்த இந்த சம்பவம் கேமராவில் பதிவாகி, கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 25) இரவு முதல் வீடியோ வைரலானது. இந்த வீடியோவை தனியார் செய்தி இணையதளத்தின் இணை நிறுவனர் முகமது சுபைர் மீது உத்திர பிரதேச போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
முசாபர்நகரில் உள்ள காவல்நிலையத்தில் சுபைர் மீது சிறார் நீதிச் சட்டம் பிரிவு 74-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே போல, வீடியோவில் உள்ள ஆசிரியர், திரிப்தா தியாகி மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 323 (தன்னிச்சையாக காயப்படுத்துதல்) மற்றும் 504 (அமைதியை மீறும் நோக்கத்துடன் வேண்டுமென்றே அவமதிப்பு) — இரண்டும் அறிய முடியாத குற்றங்களின் கீழ் பதிவு செய்யப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தால் ஜாமீனில் வெளிவரமுடியாது மற்றும் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
“நடந்து முடிந்த குரூப் – 4 தேர்வை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும்” – தவெக பொதுச்செயலாளர்.!
July 17, 2025
எரிபொருள் சப்ளை ஸ்விட்சுகளை கேப்டன் ஆஃப் செய்தாரா? – இந்திய விமானிகள் சங்கம் கண்டனம்.!
July 17, 2025