Meera Vijay Antony: “என்னிடம் பேசிக்கொண்டுதான் இருக்கிறாள், அவளுடன் நானும் இறந்துவிட்டேன்” விஜய் ஆண்டனி உருக்கம்!

நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் லாரா (16) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழ் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 12 வகுப்பு படித்து வரும் லாரா கடந்த சில நாட்களாகவே மன சோர்வாக இருந்ததாகவும், செப்டம்பர் 19 அதிகாலை 3 மணி அளவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மீராவின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்தும் விஜய் ஆண்டனிக்கு ஆறுதல் வரும் நிலையில், மகளின் மறைவு குறித்து விஜய் ஆண்டனி உருக்கமான கடிதத்தை வெளியிட்டுள்ளார்.
அந்த கடிதத்தில், என் மகள் மீரா மிகவும் அன்பானவள்,தைரியமானவள். அவள் இப்போது, இந்த உலகைவிட சிறந்த ஜாதி மதம், பணம், பொறாமை, வலி, வறுமை, வன்மம் இல்லாத ஒரு அமைதியான இடத்திற்க்குதான் சென்று இருக்கிறாள். என்னிடம் பேசிக்கொண்டுதான் இருக்கிறாள், அவளுடன் நானும் இறந்துவிட்டேன்.
நான் இப்போது அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்துவிட்டேன். அவள் பெயரில் நான் செய்யப்போகும் நல்ல காரியங்கள் அனைத்தையும், அவளே தொடங்கி வைப்பாள் என்ற உருக்கமான வார்த்தைகளை அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
— vijayantony (@vijayantony) September 21, 2023
லேட்டஸ்ட் செய்திகள்
“நடந்து முடிந்த குரூப் – 4 தேர்வை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும்” – தவெக பொதுச்செயலாளர்.!
July 17, 2025
எரிபொருள் சப்ளை ஸ்விட்சுகளை கேப்டன் ஆஃப் செய்தாரா? – இந்திய விமானிகள் சங்கம் கண்டனம்.!
July 17, 2025