எனக்கு அந்த நடிகரை மாதிரி இருக்கும் பசங்கள பிடிக்கும்! மனம் திறந்த திவ்யா துரைசாமி!

Divya Duraisamy

திரைப்படங்களில் நடித்து பிரபலமாவதை விட சமீபகாலமாக பல நடிகைகள் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதன் மூலம் பிரபலமாகி வருகிறார்கள். அதில் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் நடிகை திவ்யா துரைசாமியை கூறலாம். இவர் சமீப நாட்களாக கிளாமரான புகைப்படங்களை வெளியீட்டு வருகிறார். இதனாலே இவருக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது என்று சொல்லவேண்டும்.

தொடர்ச்சியாக பெரிய படங்களில் நடிக்கவில்லை என்றாலும் கூட இவரும் தற்போது ட்ரென்டிங் நடிகையாக தான் இருக்கிறார். இந்நிலையில், இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனக்கு எப்படி பட்ட பசங்களை பிடிக்கும் என்பதனை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” எனக்கு பொதுவாகவே சற்று அமைதியாக இருக்கும் பசங்களை பிடிக்கும்.

அதிகமாக அக்கறை எடுத்துக்கொண்டு பாதுகாப்பாக பார்த்துக்கொள்ளும் பசங்களை பிடிக்கும். மற்றபடி சற்று கோபம் கொண்ட பசங்களுக்கும் எனக்கும் சுத்தமாக செட் ஆகாது. என்னுடைய கேரக்டர் வேறு மாதிரி அவர்களுக்கும் எனக்கும் செட் ஆகாது. எனக்கு ஹே சினாமிகா படத்தில் வரும் துல்கர் சல்மான் போல இருக்கும் பசங்களை ரொம்பவே பிடிக்கும்.

அந்த மாதிரி காட்சியில் நடித்த வரலட்சுமி சரத்குமார்! இப்போ இப்படி இறங்கிட்டீங்களே மேடம்!

அவரை போல அழகாக இருக்கவேண்டும் ஸ்டைலாக இருக்க வேண்டும் என்பதனை வைத்து நான் சொல்லவில்லை. அவருடைய அழகை பற்றி நான் பேசவில்லை. அவர் அந்த படத்தில் துரு துருவென்று இருப்பார். எனவே, அந்த மாதிரி குணம் கொண்ட பசங்களை எனக்கு ரொம்பவே பிடிக்கும். மற்றபடி அழகாக இருக்கவேண்டும் அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை நன்றாக பார்த்துக்கொண்டாள் போதும்” எனவும் நடிகை திவ்யா துரைசாமி தெரிவித்துள்ளார்.

மேலும்,திவ்யா துரைசாமி தமிழ் சினிமாவில் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர். இந்த திரைப்படத்தினை தொடர்ந்து அடுத்ததாக குற்றம் குற்றமே, எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களிலும் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

eps - mk stalin
DMK - Ajithkumar
Ajith Kumar TN Govt
elon musk vs Trump
Ajith Kumar Case - Siva Gangai