என் கதறலை கேட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வந்தாரு! மாரி செல்வராஜ் பேச்சு!

திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் சிக்கியிருந்த மக்களை மீட்க வேண்டும் என்பதற்காக இய்குனர் மாரிசெல்வராஜ் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இருவரும் இணைந்து கருங்குளம், முத்தலாங்குறிச்சி உள்ளிட்ட இடங்களுக்கு நேரடியாக சென்றார்கள்.
வெள்ளத்தில் இருந்து மக்களை மீட்க உதவி செய்தது குறித்து மாரிசெல்வராஜ் தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவுகளையும் வெளியீட்டு இருந்தார். இதனையடுத்து, ஒரு தரப்பினர் மாரிசெல்வராஜுக்கு அங்கு என்ன வேலை என்பது போல விமர்சிக்க தொடங்கினார்கள்.
இந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் மாரிசெல்வராஜ் ” வெள்ளம் என்னுடைய ஊரில் வந்துள்ளது. என்னுடைய மக்கள் எங்க அம்மாவை காணும் எங்களுடைய அண்ணனை காணும் என எனக்கு கால் செய்து காப்பாற்ற வேண்டும் என்று கேட்கிறார்கள். எனவே, அவர்களுக்காக நான் ஓடி வந்து என்னால் எந்த அளவுக்கு உதவி செய்ய முடியுமோ அதே அளவிற்கு உதவிகளை செய்து வருகிறேன்,
நான் சென்னை சென்ற காரணத்தால் தான் நான் இயக்குனர். அதுவரைக்கும் இந்த ஊருல ஒருத்தன்தான் நான். இந்த மக்கள் என்ன நம்புறதுதான் என்னோட பலம். எனவே, நான் அதுக்காகவாவது எதையாவது செய்யவேண்டும். இந்த சமயத்தில் அமைச்சர் உதயநிதி சாருக்கு நான் கால் பண்ணிக் கூப்பிட்டேன். அவரு என்னோட கதறலக் கேட்டதும் சேலத்துல இருந்து உடனே கிளம்பி வந்துட்டாரு. எங்களுக்குத் தேவையான உதவிகளும் கிடைத்தது” எனவும் இயக்குர் மாரிச்செல்வராஜ் தெரிவித்துள்ளார்.