சென்னை வானிலை ஆய்வு மையத்தை மூடிவிடலாம்.! அன்புமணி ராமதாஸ் காட்டம்.! 

Anbumani Ramadoss - chennai metrology office

சரியாக மழை முன்னெச்சரிக்கையை அறிவிக்காத சென்னை வானிலை ஆய்வு மைய அலுவலகத்தை பூட்டி விடலாம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்து உள்ளார்.

முன்னதாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை பெய்து பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. அதேபோல அடுத்ததாக தென்தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழையால் அந்த மாவட்டத்தில் பெரும்பகுதிகள் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளன.

மழை பாதிப்பின் போது முதல்வர் எங்கு இருந்தார்..? நிர்மலா சீதாராமன் கேள்வி..!

தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இன்னும் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் வெளியுலக தொடர்புபெரும்பாலும் துண்டிக்கப்பட்டு மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

இது குறித்து இன்று நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வானிலை ஆய்வு மையத்தை கடுமையாக விமர்சித்து பேசினார். நெல்லையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், சென்னை வானிலை ஆய்வு மையத்தை பூட்டி விடலாம் இதனை ஐந்தாவது படிக்கும் மாணவன் கூட செய்வான் என விமர்சித்தார்.

இந்த இடத்தில் மிதமான மழை பெய்யும், இந்த இடத்தில் கனமழை பெய்யும், காற்றுடன் மழை பெய்யும் என கூறுவதற்கு எதற்காக வானிலை ஆய்வு மையம் செயல்படுகிறது.? உலகம் தொழில்நுட்பத்தில் எங்கோ சென்று கொண்டிருக்கிறது. இன்னும் சுதந்திரத்திற்கு முன்பு உள்ள தொழில்நுட்பத்தை வைத்துக்கொண்டு வானிலை ஆய்வு மையம் செயல்படுகிறது.

அமெரிக்காவில் உள்ளதை போல இங்கு ஏன் செய்ய முடியாது.? அங்கு உள்ள வானிலை ஆய்வு மையம், இந்த தேதியில் இந்த நேரத்தில் இவ்வளவு நேரம் மழை பெய்யும் என துல்லியமாக கணக்கிட்டு கூறுகிறது. அந்த தொழில்நுட்பத்தை ஏன் இந்தியாவில் செயல்படுத்த முடியாது.

சென்னையில் அரசு அறிவித்தது 20 செ.மீ மழை பெய்யும் என கூறியது. ஆனால், அங்கு 40 செ.மீ மழை பெய்தது. ஆனால் தென்தமிழகத்தில் அது கூட சொல்லவில்லை. வெறும் ஆராய்ஞ்ச் அலர்ட் மட்டுமே சொன்னார்கள். ஆனால், இங்கு அதீத கனமழை வரலாறு காணாத கனமழை பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையத்தை கடுமையாக விமர்சித்தார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

MK STALIN - T N GOVT
CM MK Stalin
INDvsENG
Tiruchendur - Murugan Temple
vaibhav suryavanshi shubman gill
laura loomer donald trump