கேப்டன் விஜயகாந்தின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதியடைய வேண்டுகிறேன் – இயக்குநர் அமீர் இரங்கல்!

ameer and vijayakanth

கேப்டன் விஜயகாந்த மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், அவருடைய இருப்புக்கு தமிழகத்தில் இருக்கும் தொண்டர்கள் ஒன்றாக திரண்டு தங்களுடைய கண்ணீர் மல்க இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். விஜயகாந்தின் இறப்புக்கு சினிமா பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளங்களின் மூலம் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில், இயக்குனர் அமீர் தற்போது அறிக்கை ஒன்றை வெளியீட்டு தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது ” ஏழைகளின் தோழன், எளியவர்களின் பாதுகாவலன், அநீதியைத் தட்டிக் கேட்கும் துணிச்சல்காரர் என்று நிஜ நாயகனாகவே வாழ்ந்த தே.மு.தி.க. தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவு உண்மையிலேயே தமிழ்த் திரையுலகுக்கும், இந்திய அரசியலுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.

திரைப்படங்களில் நல்லவர்களாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர்களுக்கு மத்தியில், திரையிலும், தரையிலும் நல்லவராகவே வாழ்ந்தவர் கேப்டன் விஜயகாந்த் அவருடன் மறுபடியும் பேசி அளவளாவும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பிக்கையோடு இருந்த என்னை, அவரது திடீர் மறைவு, பேரதிர்ச்சியிலும், மீளாத்துயரிலும் ஆழ்த்தியுள்ளது.

சூழ்நிலைக்கு எதிராக சிங்கம் போல் நின்றார் – பவன் கல்யாண் இரங்கல்.!

இன்றைய தினத்தில் உச்ச நடிகராகவும் இல்லாமல், அரசியலில் பெரும் பதவியிலும் இல்லாமல் இருந்தாலும் ஒட்டு மொத்த தமிழக மக்களின் இதயத்திலும் நீங்கா இடம் பெற்றிருக்கும், சாதி மதம் கடந்த மனிதநேயப் பண்பாளர், எங்களது “மண்ணின் மைந்தன்” கேப்டன் விஜயகாந்த் அவர்களது ஆன்மா, இறைவன் திருவடி நிழலில் அமைதியடைய வேண்டுகிறேன்” என தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 05052025
Kahmir person jumped into river and died
DMK MP A Rasa stage collapse
NEET exam 2025
India Pakistan - Postal Services