ஐபிஎல் 2024: ஹைதராபாத் அணிக்கு ஷாக் கொடுத்த குஜராத்..! அசத்தல் வெற்றி

IPL 2024: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி அசத்தலான வெற்றியை பெற்றது.
2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 12வது லீக் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் விளையாடியது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 162 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா மற்றும் அப்துல் சமத் ஆகியோர் தலா 29 ரன்கள் எடுத்தனர்.
இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது. அந்த அணியின் வீரர்கள் சிறப்பாக பேட்டிங் விளையாடிய நிலையில் 19.1 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 168 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
குஜராத் அணியின் டேவிட் மில்லர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 44 ரன்கள் எடுத்தார். சாய் சுதர்சன் 45 ரன்கள் விளாசினார். ஹைதராபாத் அணி சார்பில் ஷபாஸ் அகமது, மாயங்க் மார்கண்டே, பேட் கம்மின்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினார்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
“நடந்து முடிந்த குரூப் – 4 தேர்வை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும்” – தவெக பொதுச்செயலாளர்.!
July 17, 2025
எரிபொருள் சப்ளை ஸ்விட்சுகளை கேப்டன் ஆஃப் செய்தாரா? – இந்திய விமானிகள் சங்கம் கண்டனம்.!
July 17, 2025