மேடையில் எம்.ஜி.ஆர் பாடலை பாடிய பெண்…விஜய் கொடுத்த ரியாக்சன்!!

விஜய் : தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு உதவி தொகை மற்றும் விருது வழங்கி வருகிறார். முன்னதாக கடந்த 28-ஆம் தேதி 21 மாவட்டங்களுக்கு உதவி தொகை மற்றும் விருது விஜய் வழங்கி இருந்தார். அதனை அடுத்து 2ஆம் கட்டமாக 18 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 700 மாணவ, மாணவியர்களுக்கு இன்று கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.
சென்னை திருவான்மியூரில் உள்ள திருமண மண்டபத்தில் காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த விழாவில் பல க்யூட்டான விஷயங்களும் நடந்து வருகிறது. மாணவர்கள் மற்றும் மாணவர்களுடைய பெற்றோர்கள் விஜய்யை புகழ்ந்து பேசி வருகிறார்கள். அதற்கு விஜய் கொடுக்கும் ரியாக்சன் தொடர்பான வீடியோக்களும் வைரலாகி வருகிறது.
அப்படி தான் பெண் ஒருவர் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் பாடலை பாடி அரங்கை அதிர வைத்துள்ளார். மேடைக்கு வந்த அந்த பெண் ” அண்ணனுக்காக நான் ஒரே ஒரு பாடலை மட்டும் பாடுகிறேன். அண்ணனை பார்த்தால் எம்.ஜி.ஆரை பார்த்தது போல இருக்கும் என கூறிவிட்டு நீங்கள் நல்லா இருக்கனும் நாடு முன்னேற இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற” என்று பாடினார்.
இந்த பாடலை பாடியவுடன் விஜய் வெட்கப்பட்டு சிரித்துக்கொண்டே நகர்ந்தார். பிறகு அந்த பெண்ணின் பின்புறம் சென்றும் சிரித்துக்கொண்டு இருந்தார். இந்த வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
Antha amma face la Enna oru Santhosam ????❤️ pic.twitter.com/8JR8YfB8rL
— Filmy Kollywud (@FilmyKollywud) July 3, 2024
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025