காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்.! 5 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு.!

ஜம்மு காஷ்மீர்: இந்திய ராணுவ வீரர்கள் மீது காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் பத்னோட்டா பகுதியில் நேற்று இந்திய ராணுவ வீரர்கள் தங்கள் வழக்கமான ரோந்து பணிகளில் ஈடுப்பட்டு வந்திருந்த போது அங்கு மறைந்து இருந்த பயங்கரவாதிகள் கையெறி குண்டுகள் கொண்டும், துப்பாக்கி மூலமும் ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் ராணுவ வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். இருந்தும், பயங்கரவாதிகளின் திடீர் தாக்குதலில் இதுவரை 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேதனையுடன் தெரிவித்துள்ளார். மேலும், இந்திய ராணுவ வீரர்கள் பயங்கரவாதிகள் மீது எதிர் தாக்குதல் நடத்தி வருவதாவும், பயங்கரவாதிகள் எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலில் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்றும் அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த தாக்குதலில் 6 பேர் காயமடைந்து உள்ளதாகவும், காஷ்மீர் பகுதியில் கூடுதல் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு பயங்கரவாதிகளை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
4-வது டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து அணி நிதான தொடக்கம்.., 2 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் குவிப்பு.!
July 25, 2025
தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வான வில்சன், கமல்ஹாசன் உள்ளிட்டோர் இன்று பதவியேற்பு.!
July 25, 2025
வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி….நாளை இந்த மாவட்டங்களில் மழைக்கு வைப்பு!
July 24, 2025
‘மாரீசன்’ படம் எப்படி இருக்கு? டிவிட்டர் விமர்சனம் இதோ!
July 24, 2025