இன்றும், நாளையும் 4 மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் – டெல்டா வெதர்மேன்.!
தமிழகத்தின் பிற பகுதிகளை பொறுத்தவரை ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என டெல்டா வெதர்மேன் தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே பகுதிகளில் நிலவுகிறது. இது, அடுத்த 24 மணி நேரத்தில், வடமேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழக – தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அருகில் நிலவக்கூடும்.
இது அதற்கடுத்த 24 மணி நேரத்தில், வடக்கு திசையில், ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டி நகரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தின் பிற பகுதிகளை பொறுத்தவரை ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என டெல்டா வெதர்மேன் தகவல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை முதல் மிதமான மழை பெய்து வரும் நிலையில், தற்பொழுது, வடசென்னை மற்றும் மாநகர் பகுதிகளில் சற்றே கனமழை பெய்து வருகிறது.
இன்றும், நாளையும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு காஞ்சிபுரம் மாவட்டங்களில் விட்டு விட்டு மழை எதிர்ப்பார்க்கலாம், கடலோர பகுதிகளில் அவ்வப்போது கனமழை பெய்யக்கூடும்” என கூறியுள்ளார்.
டெல்டாவெதர்மேன் நிகழ்நேர வானிலை அறிக்கை டிசம் 18, 2024 மாலை 4 மணி நிலவரம்|
==> சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை முதல் மிதமான மழை பெய்து வரும் நிலையில், வடசென்னை மற்றும் மாநகர் பகுதிகளில் சற்றே கனமழை பதிவாகி வருகிறது.
==> இன்றும், நாளையும் #சென்னை #திருவள்ளூர்… pic.twitter.com/s9XOBMD0yN
— Delta Weatherman (Hemachander R) (@Deltarains) December 18, 2024
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025