“சினிமாவில் அவர் CM ஆகலாம்., ஆனால் நிஜத்தில்.?” மீண்டும் விஜயை சீண்டிய பவர்ஸ்டார்!
சினிமாவில் வேண்டுமானால் விஜய் முதலமைச்சராகவோ அல்லது பிரதமராகவோ ஆக முடியும். நிஜத்தில் ஆக முடியாது என பவர்ஸ்டார் சீனிவாசன் தெரிவித்தார்.

சென்னை : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருக்கும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் அவ்வப்போது சில அரசியல் கருத்துக்களை பேசியும் அரசியல் தளத்தில் தனது இருப்பை காட்டி கொள்கிறார். அவர் தற்போது தவெக தலைவர் விஜயை டார்கெட் செய்து தனது அரசியல் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஒரு செய்தியாளர் சந்திப்பில் , மேடையில் வீரபாண்டிய கட்டபொம்மன் போல வீர வசனம் பேசுகிறார். களத்திற்கு வர வேண்டும். விஜய் 2026-ல் எந்த தொகுதியில் நின்றாலும் நான் எதிர்த்து நிற்பேன். பெரிய கட்சி அழைத்தால் அவர்கள் சார்பாக நிற்பேன். இல்லையென்றால் தனித்து நிற்பேன். முதலமைச்சர் அவர் கடுமையாக விமர்சனம் செய்கிறார். அவர்கள் அனுபவம் தான் இவரது வயது என திமுகவுக்கு ஆதரவாகவும், விஜய்க்கு எதிராகவும் தனது கருத்துக்களை பேசினார்.
அதேபோல இன்று பேசிய பவர்ஸ்டார், “சினிமாவில் வேண்டுமாளால் அவர் முதலமைச்சராகவோ, பிரதமராகவோ ஆக முடியும். நிஜத்தில் ஆக முடியாது. சினிமா வேறு அரசியல் வேறு என்பதை விஜய் புரிந்து கொள்ள வேண்டும்” என தனியார் கல்லூரி விழாவில் அவர் தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!
June 17, 2025
அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!
June 17, 2025
”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!
June 17, 2025