டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு.!
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.

தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் – டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி இப்போது தர்மசாலாவில் உள்ள HPCA மைதானத்தில் நடைபெறுகிறது. முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி, பேட்டிங்கை தேர்ந்தெடுத்துள்ளது.
தற்பொழுது, டாஸ் போடப்பட்டு பிளேயிங் லெவெனும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, மழை காரணமாக ஆட்டம் தாமதமாக தொடங்கினாலும், 20 ஓவர்கள் முழுமையாக வீசப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டி 8:30-க்கு தொடங்குகிறது.
பஞ்சாப் அணி
கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான அணியில், பிரப்சிம்ரன் சிங், பிரியான்ஷ் ஆர்யா, ஜோஷ் இங்கிலிஸ், நேஹால் வதேரா, ஷஷாங்க் சிங், மார்கஸ் ஸ்டோனிஸ், மார்கோ ஜான்சன், அஸ்மதுல்லா ஓமர்சாய், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
டெல்லி அணி
கேப்டன் அக்சர் படேல் ஃபாஃப் டு பிளெசிஸ், அபிஷேக் போரல், கேஎல் ராகுல், சமீர் ரிஸ்வி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், மாதவ் திவாரி, மிட்செல் ஸ்டார்க், துஷ்மந்த சமீரா, குல்தீப் யாதவ், டி நடராஜன் தலைமையிலான அணியில், ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் அணி புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. தொடக்கத்தில் வெற்றி மேல் வெற்றி பெற்ற டெல்லி அணி கடைசி 5 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
பஞ்சாப் அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிப்படுத்த தீவிரமாக முயற்சிக்கும். இதனால், அடுத்த சுற்றுக்கு தகுதி பெற இரு அணிகளுக்கும் இது மிக முக்கியமான போட்டி ஆகும். இவ்விரு அணிகளும் இதுவரை 33 முறை நேருக்கு நேர் மோதியதில் 17-ல் பஞ்சாப்பும், 16-ல் டெல்லியும் வெற்றி பெற்றிருக்கின்றன.
லேட்டஸ்ட் செய்திகள்
ஐபிஎல் 2025 போட்டிகள் காலவரையின்றி நிறுத்தம்!
May 9, 2025